ஜெய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு, Jai’s new film title announced,

நடிகர் ஜெய் நடிப்பில் கடந்த ஆண்டு ‘தீரா காதல்’ மற்றும் ‘பார்ட்டி’ ஆகிய திரைப்படங்கள் வெளயாகின. இந்தாண்டு ஜெய் நடிப்பில் வெளியான ‘பேபி&பேபி’ திரைப்படம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், ஜெய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘ஒர்க்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரொமான்டிக் ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்த படத்தை வினய் கிருஷ்ணா இயக்குகிறார்.
இந்த படத்தில் யோகி பாபு, நாகிநீடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஷோபனா ராணி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.