’ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி…அவரே கொடுத்த அப்டேட்

சென்னை,
ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ’ஜெயிலர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ” எனக்கு ரஜினிகாந்த் சாரை ரொம்ப பிடிக்கும். அவருடன் இருக்கும்போது நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். தற்போது அவரின் ‘ஜெயிலர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறேன்’ என்றார்.
மேலும் வில்லன் கதாபாத்திரத்தை தேர்வு செய்வது பற்றி பேசுகையில், ’எனக்கு பிடித்த கதையில் மட்டுமே வில்லன்/சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். வில்லன் கதாபாத்திரத்திற்காக நான் பல கதைகளைக் கேட்டேன். பலர் என்னிடம் கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களைக் கொண்டு வருகிறார்கள், அதை நான் செய்ய விரும்பவில்லை” என்றார்.






