'ஜெயிலர் 2' படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!

'ஜெயிலர் 2' படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!


சென்னை,

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்திலிருந்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து ‘எந்திரன், லிங்கா’ ஆகிய படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *