‘ஜெயிலர்’ படத்தின் சாதனையை முறியடித்த ‘கூலி’ டிரெய்லர்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கூலி படத்தின் டிரெய்லர் ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அதாவது, கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 10.4 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. ஆனால், கூலி படத்தின் டிரெய்லரோ வெளியான 24 மணிநேரத்தில் 14.6 மில்லியன் பார்வைகளை பெற்று ஜெயிலர் படத்தின் சாதனை முறியடித்துள்ளது.
ஆனால் லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் வெளியான லியோ படத்தின் டிரெய்லர் 24 மணிநேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.