ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் படத்தில் இணையும் மற்றொரு ''காந்தாரா'' நட்சத்திரம்?

சென்னை,
பிரபாஸுடன் ‘சலார்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ”என்டிஆர்நீல்” படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காந்தாரா 2 படத்தில் நடித்து வரும் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இப்படத்தில் மற்றொரு காந்தாரா பட நட்சத்திரம் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காந்தாரா பட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லையெறாலும், இது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25 அன்று திரைக்கு வரவுள்ளது.