ஜூனியர் என்டிஆரின் “டிராகன்” படத்தில் இணைந்த அனில் கபூர்

ஜூனியர் என்டிஆரின் “டிராகன்” படத்தில் இணைந்த அனில் கபூர்


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. பாலிவுட்டில் ‘வார் 2’ படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்திருந்தார்.

‘கே.ஜி.எப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார்.

‘டிராகன்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். ‘வார் 2’ படத்துக்குப் பிறகு ஜுனியர் என் டி ஆருடன் அனில் கபூர் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *