ஜீவனாம்சம் கேட்ட மனைவி! நீதிமன்றத்திற்கு மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்த நபர்

ஜீவனாம்சம் கேட்ட மனைவி! நீதிமன்றத்திற்கு மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்த நபர்


நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு கணவர் ஒருவர் மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து ஜோடி

கோவையில் குடும்ப நல நீதிமன்றத்தில் தம்பதி ஒருவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கானது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

குறித்த வழக்களை விசாரித்த நீதிபதி 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு கணவருக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதைக் ஏற்றுக் கொண்ட கணவர், நீதிமன்ற உத்தரவுப்படி, விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 80 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தார்.

ஜீவனாம்சம் கேட்ட மனைவி! நீதிமன்றத்திற்கு மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்த நபர் | Husband Alimony Wife Court In Cash Bag

காரில் வந்து இறங்கிய அவர், இரண்டு கைகளில் கொத்து கொத்தாக 20 பைகளுடன் நீதிமன்றம் சென்றுள்ளார். வெறும் 80 ஆயிரம் ரூபாய்க்கு எதற்காக இத்தனை பை என்று யோசித்த நிலையில், பின்பு இவரது செயல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜீவனாம்ச தொகையின் ஒரு பகுதியான, 80 ஆயிரம் ரூபாயை, பொடி சில்லறையாக கொண்டு வந்திருப்பதாக, இரு பைகளை நீட்டியுள்ளார்.

. தனது இந்த செயல் மூலம், மனைவிக்கு ஏதோ ஒரு விசயத்தை சொல்ல அவர் முயற்சிப்பதையும், அவரது வன்மத்தையும் புரிந்து கொண்ட நீதிபதி, அந்த சில்லறையை ஏற்க மறுத்து, அவற்றை ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருமாறு அந்த கணவருக்கு அறிவுரை வழங்கி, வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

ஜீவனாம்சம் கேட்ட மனைவி! நீதிமன்றத்திற்கு மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்த நபர் | Husband Alimony Wife Court In Cash Bag



மனைவிக்கு பல்பு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வந்த கணவருக்கு, பெரிய பல்பு கிடைத்ததால், ஏமாற்றத்துடன் தான் கொண்டு வந்த சில்லறை மூட்டைகளை, காரில் ஏற்றிக் கொண்டு, அவற்றை ரூபாய் நோட்டுகளாக மாற்றப் காரில் புறப்பட்டார் ‘நாணயமான’ கணவர்! இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், ‘கோர்ட் படி ஏறியும்.. இவங்க பஞ்சாயத்து இன்னும் முடியலயே..’ என்று பேசிச் சென்றதை காண முடிந்தது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *