ஜிவி பிரகாஷ் பணம் வாங்காமல்கூட நடிக்க தயாராக இருப்பார்- தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் | GV Prakash would be willing to act even without being paid

ஜிவி பிரகாஷ் பணம் வாங்காமல்கூட நடிக்க தயாராக இருப்பார்- தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் | GV Prakash would be willing to act even without being paid


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் தற்போது மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிளாக் மெயில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். தெய்வ கனி, ஜெயக்கொடி அமல்ராஜ் படத்தை தயாரித்துள்ளனர். வருகிற 12-ந் தேதி படம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் ஏ.எல். விஜய், சசி, நிகேஷ், சதீஷ், தயாரிப்பாளர் டி. சிவா மற்றும் தனஞ்ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற இயக்குனர்கள் ஒவ்வொருவரும் பேசும் போது நாம் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என ஜி.வி.பிரகாசிடம் கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “புதிய படத்திற்கு இசையமைப்பதற்கு ஜி.வி.பிரகாசை அணுகினால் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பார். அதே நேரத்தில் நடிப்பதற்கு கேட்டால் பணம் வாங்காமல் கூட நடிக்க தயாராக இருப்பார். அந்த அளவுக்கு நடிப்பின் மீது அவருக்கு பற்று அதிகம். டைரக்டர்கள் விரும்பும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்” என்று பேசினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *