”ஜாவா சுந்தரேசன்” என பெயரை மாற்றிக்கொண்ட நடிகர் சாம்ஸ்

”ஜாவா சுந்தரேசன்” என பெயரை மாற்றிக்கொண்ட நடிகர் சாம்ஸ்


சென்னை,

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் ‘அறை எண் 305ல் கடவுள்’. இந்த படத்தினை இயக்குநர் சிம்பு தேவன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ”ஜாவா சுந்தரேசன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். சுவாமிநாதன் என்ற தன்னுடைய இயற்பெயரை திரைத்துறைக்காக சாம்ஸ் என்று மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில், நடிகர் சாம்ஸ் தன்னுடைய பெயரை அதிகாரபூர்வமாக ”ஜாவா சுந்தரேசன்” என்று மாற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சாம்ஸ் என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்று அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று எனது பெயரை ஜாவா சுந்தரேசன் என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். ஜாவா சுந்தரேசன் என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் சிம்பு தேவனிடம் முறைப்படி அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் ஜாவா சுந்தரேசன் ஆக எனது திரைப்பயணத்தை தொடர்கிறேன். அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனி என்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *