ஜான்வி கபூருக்கு பதில் ஸ்ரீலீலா…எந்த படத்தில் தெரியுமா?

சென்னை,
நீண்ட காலமாக தாமதமாகி வரும் தோஸ்தானா 2 படத்தில் ஜான்வி கபூருக்கு பதிலாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பல வருட தாமதம் மற்றும் நடிகர் மாற்றங்களுக்குப் பிறகு, தர்மா புரொடக்சன்ஸ் இந்த படத்தை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஸ்ரீலீலா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக போகிறார். கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஜான்வி கபூர் நடிக்க இருந்த தோஸ்தானா 2 படத்தில் அவருக்கு பதிலாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.