“ஜன நாயகன்” திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவு

“ஜன நாயகன்” திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவு


சென்னை,

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன். இப்படம் இன்று (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு தொடர்பான விசாரனை கடந்த (ஜன.6) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான தீர்ப்பு (இன்று) ஜன.9 வழங்க முயற்சிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

இதன்படி ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் வழக்கில், இன்று நடந்த விசாரணையில், திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது; இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது எனவும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *