'ஜன நாயகன்' டிரெய்லர் ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..!

'ஜன நாயகன்' டிரெய்லர் ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..!


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல்பாடலான “தளபதி கச்சேரி” பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜன நாயகன் படத்தில் டிரெய்லர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, வருகிற 2026 ஜனவரி 1ஆம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு, சில நாட்களில் டிரெய்லர் வெளியாக உள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *