“ஜன நாயகன்” சான்றிதழ் விவகாரம் – தணிக்கை வாரிய தலைவர் கருத்து தெரிவிக்க மறுப்பு

“ஜன நாயகன்” சான்றிதழ் விவகாரம் – தணிக்கை வாரிய தலைவர்  கருத்து தெரிவிக்க  மறுப்பு


புதுடெல்லி,

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜன நாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்துசெய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ‘ஜன நாயகன்’ பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்திவைத்து ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சென்னை  ஐகோர்ட்டு வழக்கை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்​நிலை​யில், ஆங்​கில ஊடகம் ஒன்றுக்கு பேட்​டியளித்த மத்​திய தணிக்கை வாரிய தலை​வர் பிரசூன் ஜோஷி​யிடம் ‘ஜன​நாயகன்’ தணிக்கை பிரச்​சினை பற்றி கேட்​கப்​பட்​டது. அந்த விவ​காரம் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ள​தால் அதுபற்றி பேச மறுத்​து​விட்​டார்.

‘டாக்​ஸிக்’ படத்​தின் டீசர் சர்ச்சை பற்றி கேட்​ட​போது, “தற்​போது நான் எந்​தக் கருத்​தை​யும் தெரிவிக்க விரும்​ப​வில்​லை. ஆனால் ஒரு விஷ​யத்​தைத் தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன். யூடியூப் மற்​றும் பிற டிஜிட்​டல் தளங்​களில் வரும் பல விஷ​யங்​கள் தணிக்கை சான்று பெறாதவை. அவை மத்​திய திரைப்​படத் தணிக்கை வாரி​யத்​தின் அதி​கார வரம்​புக்​குள் வரு​வ​தில்​லை. ஆன்​லைனில் தாங்​கள் பார்க்​கும் அனைத்​தும் தணிக்கை செய்​யப்​பட்​டவை என்ற அனு​மானத்​துக்கு யாரும் வரவேண்​டாம்.திரைப்பட தணிக்கை வாரிய உறுப்​பினர்​களுக்​குப் படங்​கள் பார்த்து சான்​றிதழ் அளிப்​பது கடின​மான வேலை. அவர்​கள், திரைப் பட இயக்​குநர்​கள் சொல்​வதை​யும் சமூகம் எதிர்​பார்ப்​ப​தையும்​ சமநிலைப்​படுத்​த முயற்​சிக்​கிறார்​கள்​” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *