‘ஜனநாயகன்’ படம்: விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை

‘ஜனநாயகன்’ படம்: விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ரேவதி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 2002ம் ஆண்டில் விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார். அந்த வகையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்து வருகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *