ஜனநாயகன்தான் கடைசி படமா? விஜய் சொன்ன பதில்

ஜனநாயகன்தான் கடைசி படமா? விஜய் சொன்ன பதில்


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இது விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் நடிந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மமிதா பைஜுவிடம் “விஜய் தொடர்ந்து நடிப்பாரா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த மமிதா, நான் விஜய் சாரிடம் இதுபற்றி கேட்டேன், அதற்கு விஜய் சார், “2026 தேர்தல் முடிவைப் பொறுத்தே சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து முடிவு செய்வேன்” என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் குறித்து நடிகை மமிதா பைஜு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *