‘சொந்த வீடு கட்ட இன்னொருவர் வீட்டை இடிப்பது…’ – சமந்தாவை மறைமுகமாக சாடினாரா பூனம் கவுர்|Broke a home to create your own

‘சொந்த வீடு கட்ட இன்னொருவர் வீட்டை இடிப்பது…’ – சமந்தாவை மறைமுகமாக சாடினாரா பூனம் கவுர்|Broke a home to create your own


சென்னை,

ஒரு கதாநாயகியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், பூனம் கவுர் தனது கருத்துகளால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பாக பேசப்படுகிறார். சமீபத்தில், அவர் ஒரு டுவீட் மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இப்போது இணையத்தில் பெரிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளன

அதில், ‘சொந்த வீடு கட்டுவதற்காக இன்னொருவர் வீட்டை இடிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பலவீனமான ஆண்களை பணத்தால் வாங்கலாம், இந்த அகங்காரப் பெண்ணை பெய்டு பிஆர் பெரிய ஆளாக காட்டுகிறது’ என அவர் டுவீட் செய்துள்ளார். இதில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மறைமுகமாக பூனம், சமந்தாவை குறிவைத்ததாக நெட்டிசன்கள் கருந்து தெரிவிக்கின்றனர்.

நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் நிடிமோருவின் திருமண செய்தி இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *