‘சொட்டை’ தலையுடன் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகர்

சென்னை,
நவீத் பரீத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘சொட்ட சொட்ட நனையுது’. படத்தில் கதாநாயகனாக நிஷாந்த்ரூஷோ ‘சொட்டை’ தலை கெட்அப்பில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் வர்ஷினி, ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ரஞ்சித் உன்னி இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ரோபோசங்கர், கல்லூரி வினோத், கலக்கப் போவது ராஜா, ஆனந்த்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பிரபலம் பிரியங்காநாயர் முதல் முறையாக இந்த படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். வருகிற 22-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கதாநாயகனான நிஷாந்த்ரூஷோ, படத்தில் நடித்த சொட்ட தலை தோற்றத்தில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் அவர் பேசியதாவது:- சொட்டை என்பது இயற்கைதான். ஆனால் அரைகுறையாக சுட்டிகாட்டி அவர்களுக்கு மேலும் வலிகளை கொடுக்கக் கூடாது. இந்த படம் பார்த்தால் சொட்டை தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.