சொகுசு கப்பல் வைத்திருக்கிறேனா? – மாதவன் விளக்கம்

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் தற்போது, பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். படங்கள் இயக்கி நடிக்கவும் செய்கிறார்.
இதற்கிடையில் துபாயில் மாதவன் சொந்தமாக சொகுசு கப்பல் வைத்திருப்பதாகவும், அதில் இருந்து பெரியளவில் வருமானம் பார்த்து வருவதாகவும் பேசப்பட்டது.
இதனை மாதவன் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘என்னிடம் 75 அடி நீளத்தில் சொகுசு கப்பல் எல்லாம் இல்லை. சின்ன போட் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அது தான் நான் செய்த மிகப்பெரிய செலவு. மற்றபடி எதையும் நம்ப வேண்டாம். ஆரம்ப காலத்தில் ரியல் எஸ்டேட்டில் செய்த முதலீடுகள் இப்போது எனக்கு உதவி வருகின்றன”, என்றார்.
மாதவனிடம் உள்ள போட்டின் விலை ரூ.16 கோடி என்று கூறப்படுகிறது.