சைமா விருதுகள்: சிறந்த அறிமுக நடிகை விருதை வென்ற பாக்யஸ்ரீ போர்ஸ்

தென்னிந்திய திரைப்பட உலகில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர் நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாடல்களில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
ராம் பொத்தினேனி ஜோடியாக நடிக்கும் ‘ஆந்திரா கிங் தாலுகா’ படம் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படம் மூலமாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ் 1950ம் ஆண்டு கால கட்டத்தின் சீரிய நயத்தையும் மென்மையையும் வெளிப்படுத்தி, மனிதநேயத்தையும் காலத்தைக் கடக்கும் உணர்வுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
பாக்யஸ்ரீ, மிகச்சிறந்த நடிகையாக வேண்டுமென்கிற தன் கனவை அடைய, விடாமுயற்சியுடன் உழைத்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஆவலுடன் உழைத்து வருகிறார்.
சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றிருப்பது, இந்த பன்முகத் திறமை கொண்ட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸுக்கு ஒரு தொடக்கமே. அவரை பெரும் திரையில் கண்டு ரசிக்க, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.