‘செல்ல மகளே’ பாடல் வெளியானது | The song ‘Chella Magale’

‘செல்ல மகளே’ பாடல் வெளியானது | The song ‘Chella Magale’


சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், இப்படத்திலிருந்து “தளபதி கச்சேரி”, “ஒரு பேரே வரலாறு” ஆகிய 2 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து தற்போது 3வது பாடலின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் 3வது பாடலான “செல்ல மகளே” என்ற பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

அதன்படி, விஜய் பாடியுள்ள “செல்ல மகளே” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *