சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்திற்கு நினைவுப் பரிசு

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்திற்கு நினைவுப் பரிசு


சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது.

ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. புசான் சர்வதேச திரைப்பட விழா. பஜர் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழா மற்றும் லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா போன்ற பிரபலமான திரைப்பட விழாக்களின் படங்களும் திரையிடப்பட உள்ளன.

அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்டு பேமிலி, பாட்ஷா, 3பி.எச்.கே. என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட உள்ளன.இந்த திரைப்படங்கள் அனைத்தும் ராயப்பேட்டை பிவிஆர் சத்யம் சினிமாஸ், சிட்டி சென்டர் ஐ நாக்ஸ் சினிமாஸ் ஆகிய திரையரங்களில் திரையிட உள்ளன.

122 திரைப்படங்களில் இருந்து 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டு தூதர்கள், சர்வதேச திடைப்பட இயக்குநர்கள் உள்பட பலரும் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன மாணவர்களின் குறுப்படங்களும் திரையிடப்பட உள்ளது.

1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ‘பாட்ஷா’.

இந்நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா விருதை பெற்றுக்கொண்டார்.

View this post on Instagram

A post shared by Chennai International Film Festival (@chennai_filmfestival)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *