சூரி அண்ணனின் வளர்ச்சி பலருக்கு மகிழ்ச்சி; டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

சூரி அண்ணனின் வளர்ச்சி பலருக்கு மகிழ்ச்சி; டைரக்டர் லோகேஷ் கனகராஜ்


சென்னை

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக சூரி கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார். மாமன் படம் 16ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, சூரி அண்ணனின் வளர்ச்சி பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நாம் வளர்வதை மற்றவர் பார்த்து நிஜமாக மகிழ்வதே உண்மையான வளர்ச்சி. நான் சிறியதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளேன். 10 கதைகள் வந்தால் அதில் 5 கதை சூரி அண்ணனுக்குதான் வருகின்றன. இந்த வளர்ச்சி மிகப்பெரியது. உங்களுக்கு இன்னும் பல வெற்றிகள் வர வேண்டும்’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *