சூரியின் ‘மாமன்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன்!

சூரியின் ‘மாமன்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன்!


சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோவே இந்த படத்தையும் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படமாக உருவாகி வருகிறது.

இந்தநிலையில், சூரியின் ‘மாமன்’ படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். அங்கு படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது நடிகர் சூரி சிவகார்த்திகேயனை ஆரத்தழுவி கண்ணத்தில் முத்தமிட்டார். இது குறித்த பதிவை சூரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *