‘சூப்பர் உமன்' அனுபவம்: கல்யாணி பிரியதர்ஷன் உற்சாகம்

டொமினிக் அருண் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் ‘லோகா சாப்டர்-1 : சந்திரா’ படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இதில் சூப்பர் உமன் கதாபாத்திரத்தில் இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, அவருக்கு மகிழ்ச்சியை அள்ளி தந்துள்ளது.
இது தொடர்பாக கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது “இந்த படத்தில் நடிக்கும்போதே எனக்கு பதற்றம் இருந்தது. ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள்? என்ற பயமும் இருந்தது. ஆனால் ரசிகர்களின் வரவேற்பு நம்பிக்கை அளித்துள்ளது. படத்தின் வசூல் அதிகரித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடிக்கும் உத்வேகமும் கிடைத்திருக்கிறது” என்று பெருமிதம் கொள்கிறார் .