சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை: பிரகாஷ்ராஜ்

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை: பிரகாஷ்ராஜ்


ஐதராபாத்,

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ஏற்று நடிகர் பிரகாஷ்ராஜ் அமலாக்கத்துறை முன்பாக நேற்று ஆஜர் ஆனார்.

பின்னர் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. இனி இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். என்னை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *