சுரேஷ் கிருஷ்ணாவின் "சாருகேசி" டிரெய்லர் வெளியீடு

சென்னை,
திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒய் ஜி மகேந்திரனின் மேடை நாடகத்தை தழுவி ‘சாருகேசி’ படத்தை இயக்கியுள்ளார். ‘சாருகேசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய இசைக்கலைஞரைப் பற்றியது இந்த படம். சமுத்திரக்கனி, சத்யராஜ், ஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், சாய் தீனா, ஒய்.ஜி.மதுவந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக தேவா, வசனம் மற்றும் பாடல்களுக்கு பா விஜய், ஒளிப்பதிவாளராக சஞ்சய், படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் மற்றும் பாடலுக்கு ஷங்கர் மகாதேவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்துள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி வருகிறார். சுரேஷ் கிருஷ்ணா சத்யா, அண்ணாமலை மற்றும் பாட்ஷா போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
‘சாருகேசி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று சென்னை மதுரவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா, படத்தில் நடித்த ஒய் ஜி மகேந்திரன், சுஹாசினி, சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், தலைவாசல் விஜய், பாடலாசிரியர் பா விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.