சிவனின் ஓவியத்தை வரைந்த பிரபல நடிகர் – வீடியோ வைரல்|Sudheer babu paints lord shiva

சென்னை,
பிரபல தெலுங்கு ஹீரோ சுதீர் பாபு. இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு கலையும் இருக்கிறது. அதுதான் ஓவியக் கலை. சமீபத்தில், அவர் சிவ பெருமானின் ஓவியத்தை வரைந்தார்.
அது தொடர்பான வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுதீர் பாபு தற்போது ”ஜடதாரா” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது சோனாக்சி சின்ஹாவின் முதல் தெலுங்கு படமாகும்.
வெங்கட் கல்யாண் இயக்கி வரும் இப்படம் நவம்பர் 7-ம் தேதி தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.