சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படத்தில் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் – ஏ.ஆர். முருகதாஸ் | Sivakarthikeyan has played an unconventional role in ‘Madharasi’

சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படத்தில் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் – ஏ.ஆர். முருகதாஸ் | Sivakarthikeyan has played an unconventional role in ‘Madharasi’


சென்னை,

இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.

இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்து தெரிவித்துள்ளார். அதாவது, “தான் இயக்கிய ‘துப்பாக்கி, கஜினி’ ஆகிய படங்களில் நடிகர்களுக்கு வழங்கியதை போல், இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு (அசாதாரணமான) வழக்கத்திற்கு மாறான ஒரு கதாபாத்திரத்தை வழங்கியுள்ளதாக கூறினார். படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. கிளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு பணிகள் மட்டும் 12 நாட்கள் உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெறும்” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *