சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு|Venkat Prabhu gives an update on Sivakarthikeyan’s film

சென்னை,
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ”தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படம் தொடர்பான அப்டேட்டை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். அவர் கூறுகையில்,
“சிவகார்த்திகேயனுடன் எனது அடுத்த படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளை நான் தற்போது செய்து வருகிறேன். டிசம்பர் அல்லது ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்” என்றார்.