சிவகார்த்திகேயன் நடித்த "மதராஸி" படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயன் நடித்த "மதராஸி" படத்தின் படப்பிடிப்பு நிறைவு


சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்கே23’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு தமிழில் ‘மதராஸி’ என்றும் இந்தியில் ‘தில் மதராஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துதது. இந்த தேதியில்தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இறுதிக்கட்ட காட்சியை இலங்கையில் படக்குழு கடந்த இரண்டு வாரங்களாக படமாக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது. வித்யுத் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே உள்ள சண்டை காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்பொழுது பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *