சிவகார்த்திகேயன் குரலில் “ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் பாடல் புரோமோ வீடியோ

சிவகார்த்திகேயன் குரலில் “ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் பாடல் புரோமோ வீடியோ


சென்னை,

‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி ‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோக்களாக வெளியிட்டு பரவலான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளனர்.

இவர்கள் ‘ஓ காட் பியூட்டிபுல்’ என்ற படத்தினை தயாரித்து உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2023ம் ஆண்டே நிறைவுபெற்றன. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். மேலும், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் குரலில் ‘ஓ காட் பியூட்டிபுல்’ படத்தின் முதல் பாடல் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

View this post on Instagram

A post shared by Saregama Tamil (@saregamatamil)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *