சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்துடன் மோதும் துல்கர் சல்மானின் 'காந்தா'

சென்னை,
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து துல்கர் சல்மானின் ‘காந்தா’ படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் மொழியாக உள்ளது.
இந்த இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால், அவற்றிற்கு இடையே போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் துல்கரின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அதேப்போல் இந்த முறையும் இந்த இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.