சில மாற்றங்களுடன் திரையிடப்படும் ‘துரந்தர்’ |’Dhurandhar’ re-releases after muting words, minor changes

சில மாற்றங்களுடன் திரையிடப்படும் ‘துரந்தர்’ |’Dhurandhar’ re-releases after muting words, minor changes


சென்னை,

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்த ‘துரந்தர்’ திரைப்படம் இன்னும் வெற்றிவாகை சூடி வருகிறது.

எனினும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த சில வார்த்தைகளுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. படத்தில் சில சர்ச்சைக்குரிய வார்த்தைகள் ‘மியூட்’ (Mute) செய்யப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெற்றிருந்த ‘பலோச்’ (Baloch) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ஒரு முக்கிய வசனத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் இப்போது பார்ப்பது இந்த மாற்றியமைக்கப்பட்ட பதிப்பையே.

படக்குழுவின் இந்த முடிவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தலையீடு இல்லை எனவும், ஒளிப்பதிவு சட்டத்தின் 31 ஆவது விதியின் கீழ் இந்த நடவடிக்கையைப் படக்குழு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிச. 29ஆம் தேதி வரைக்கும் மட்டுமே உலக அளவில் இந்தப் படம் ரூ.1,100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்தப் படம் இந்தியாவில் மட்டும் இன்றுவரை ரூ.784.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில் இந்தியாவிலேயே ரூ. 1,000 கோடியை எட்ட வாய்ப்பிருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *