சிறு வயதில் அப்படி நடித்தது தவறுதான் – "வாலி" பட நடிகை

டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர், தேவிப்பிரியா. பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களிலேயே நடித்து வருவதால், இல்லங்கள் தோறும் இல்லத்தரசிகளின் திட்டுகளுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார். வாலி, காக்க காக்க,காதல் கொண்டேன்,காதல், விருமாண்டி உள்ளிட்ட சில படங்களிலும் தலைகாட்டியுள்ளார். இதுதவிர ‘டப்பிங்’கலைஞராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில் தனது சினிமா பயணம் பற்றி தேவிப்பிரியா பகிரும்போது, “எனது சிறு வயதிலேயே நான் நடிக்க வந்துவிட்டேன். சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிந்ததால், என் கவனம் வெள்ளித்திரைக்கு செல்லவில்லை. என்னுடன் நடித்த தேவதர்ஷினி போன்றவர்கள் சரியான நேரத்தில் வெள்ளித்திரையில் தலைகாட்டி வந்தார்கள். சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையையும் பயன்படுத்தி நடித்ததால், சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. சில நேரம் இப்படி நடித்தது தவறுதான் என்றும் எண்ணிக்கொள்வேன்” என்றார். இந்தப் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.