சிறுவயதில் நேர்ந்த கொடுமை…கசப்பான அனுபவத்தை பகிர்ந்த வரலட்சுமி சரத்குமார்

சிறுவயதில் நேர்ந்த கொடுமை…கசப்பான அனுபவத்தை பகிர்ந்த வரலட்சுமி சரத்குமார்


சென்னை,

‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார்.தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்டக்கோழி-2’, ‘சர்க்கார்’, ‘மாரி-2’, உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி நடித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

மறுபுறம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வரலட்சுமி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் தனக்கு சிறுவயதில் நேர்ந்த கசப்பான அனுபவத்தை கூறினார். அவர் கூறும்போது, “என்னுடைய சிறுவயதில் அப்பா – அம்மா இருவரும் என்னை மற்றவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். அப்போது 5-6 நபர்களால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *