சிரஞ்சீவி படத்தில் இணைந்த லோகா பட ஒளிப்பதிவாளர் |Lokah cinematographer Nimish Ravi joins Bobby Kolli-Chiranjeevi film Mega 158

சென்னை,
இயக்குனர் பாபி கொல்லி மற்றும் நடிகர் சிரஞ்சீவி கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்திற்கு தற்காலிகமாக மெகா158 எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், லக்கி பாஸ்கர், கிங் ஆப் கோதா, லோகா போன்ற வெற்றி படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்த நிமிஷ் ரவி, மெகா158 படத்தில் இணைந்துள்ளார்.
நிமிஷ் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு, கே.வி.என் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குனர் பாபி ‘மெகா 158″ குழுவின் சார்பாக சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இது இந்தப் படத்தை பற்றிய ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது. சிரஞ்சீவி- பாபி கூட்டணியில் இது மற்றொரு பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.






