சிரஞ்சீவி-நயன்தாரா இணைந்து நடித்த படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘மன சங்கர வர பிரசாத் கரு’. இந்த படம் சிரஞ்சீவியின் 157வது படமாகும்.
இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார். இதில் கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.
கமர்சியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் 2026ல் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்திலிருந்து “மீசால பில்லா” என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.