சிம்பொனி அரங்கேற்றம் – இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த யுவன்!

சிம்பொனி அரங்கேற்றம் – இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த யுவன்!


லண்டன்,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளா் இளையராஜா இயற்றியிருக்கும் மேற்கத்திய – கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று இரவு நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின், திருமாவளவன், கமல், நடிகர் சிவகார்த்திகேயன், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தமது தந்தையை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “அன்புள்ள அப்பா, நீங்கள் செய்யும் அனைத்தையும் பார்த்து நான் பெருமை அடைகிறேன். சிம்பொனி நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்! ” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *