சிம்புக்காக காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம்…சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? – சூரி பதில்|Santhanam in a comedy role for Simbu…Will you act for Sivakarthikeyan?

சிம்புக்காக காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம்…சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? – சூரி பதில்|Santhanam in a comedy role for Simbu…Will you act for Sivakarthikeyan?


சென்னை,

சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் சரிசமமான கதாபாத்திரம் அமைந்தால் ஒன்றாக நடிப்போம் என்று சூரி கூறியுள்ளார்.

சூரி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருச்சியில் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், சிம்புக்காக காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். அதேபோல சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிக்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சூரி, ‘நானே சரி சொன்னாலும் தம்பி கூப்பிடமாட்டார். அண்ணா, நாம் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் அமைந்தால்தான் பண்ணனும் என்று தம்பியே சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக அப்படி ஒரு கதை அமைந்தால் பண்ணுவோம்’ என்றார்.

10 வருடங்களுக்கு பிறகு நடிகர் சந்தானம், காமெடியனாக சிம்புவின் 49-வது படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *