சினிமா வாய்ப்புக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்- நடிகை ஜீவிதா | We must wait patiently for cinema opportunities

சென்னை,
மாடலிங் துறை மூலம் பல துறைக்கு வந்துள்ளனர். அந்த வகையில் வெள்ளை குதிரை மற்றும் புதிய படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருபவர் ஜீவிதா. சென்னையை சேர்ந்த ஜீவிதா அளித்த பேட்டியில், “மாடலிங்கில் என் புகைப்படங்களை பார்த்து சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. என்னை வங்கி பணிக்கு அனுப்புவதற்கு என் அம்மா ஆசைப்பட்டார். அதற்காக தமிழ் பெண்ணான நான் தெலுங்கு, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை கற்றுக் கொண்டேன்.
சினிமா ஒரு கடல், அதில் உடனே வாய்ப்புகள் வந்து விடாது. வாய்ப்புக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். நமக்கான காலம் வரும் வரை நாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும். எனக்கு சின்னத்திரை வாய்ப்புகள் அதிகம் வருகிறது. ஆனால் சினிமாவில் கவனம் செலுத்துவதால் சின்னத்திரை பக்கம் செல்வதில்லை” என்றார்.