சினிமாவுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வரவில்லை- இயக்குனர் பா.ரஞ்சித்

சென்னை,
அதியன் ஆதிரை இயக்கத்தில் நீலம் புரொடக்சன் மற்றும் லேர்ன்அன்ட் டெக்புரொடக்ஷஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘தண்டகாரண்யம்’. படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு உள்பட பலர் நடித்து உள்ளனர்.
வருகிற 19-ந்தேதி படம் திரைக்கு வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:-
நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் வரவில்லை. சமூகத்தைச் சரி செய்ய வேண்டும் என்கிற முனைப்போடு வந்திருக்கிறோம். நான் இயக்குனராக வரும் போது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர்.
முன்பெல்லாம் இடதுசாரிகள் அதிகம் இருப்பார்கள்.இருப்பினும் தற்பொழுது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள். நேபாளத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய கலவரம் கூட ராப் இசை கலை––ஞர்–களுக்கு மிகப்பெரும் பங்கானது இருக்கிறது.
தொடர்ச்சியாக நீலம் புரொடக்ஷனில் வேட்டுவம், பைசன் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.