சினிமாவுக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இருக்கிறேன்- நடிகர் சர்வா | I am ready to take any risk for cinema

‘ஆர்.கே.நகர்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ படங்களில் நடித்தவர், சர்வா. ‘ஹாட் பீட்’ வெப் தொடரில் இவரது குணா கதாபாத்திரம் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்க, பிரபலமாகி போயிருக்கிறார். ‘ஹாட் பீட்-2′ வெப் தொடரும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அதர்வாவுடன் இவர் நடித்த ‘தணல்’ படம் விரைவில் வெளியாகிறது. சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்திருக்கும் சர்வா, தற்போது சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். புதிய கதைகளையும் கேட்டு வருகிறார். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார் என்றும் தெரிவிக்கிறார்.
அவர் கூறும்போது, ‘ஹாட் பீட்’ என்னை மக்களிடம் பெரியளவில் ‘கனெக்ட்’ செய்துள்ளது. எல்லோரும் என்னை குணா என்று அழைப்பது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் தந்துள்ளது. என்னை பொறுத்தவரை நல்ல கதாபாத்திரங்கள், அது எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார். எனக்கு பிடித்த சினிமாவுக்காக எந்த ‘ரிஸ்க்’கும் எடுக்க தயாராகவே இருக்கிறேன். எதிர்மறை கதாபாத்திரங்களில் தான் நடிப்பின் பல பரிமாணங்களை காட்டமுடியும். எனவே வில்லனாக மிரட்ட தயாராகவே இருக்கிறேன். நடிப்பின் எந்த எல்லைக்கும் செல்ல நான் தயார் என்றார்.