”சினிமாவில் பெண்களுக்கு அது இருக்கத்தான் செய்கிறது”

சென்னை,
சிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ”டூரிஸ்ட் பேமிலி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் யோகலட்சுமி. இப்படம் ரூ.70 கோடிக்கு மேல் வசூவித்து சாதனைப் படைத்தது.
இந்நிலையில் நடிகை யோகலட்சுமி சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,
”சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. சிலர் தவறாக கேட்பது போன்ற நிலை வந்து விட்டாலும் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் இருக்க வேண்டும். வேண்டாம் என்று முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார்
யோகலட்சுமியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகின்றது.