சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் உயிரிழப்பு

சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் உயிரிழப்பு


மும்பை,

பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தர்திபுத்ரா நந்தினி’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு முன், ‘உதரியான்’ மற்றும் ‘புண்யஷ்லோக் அஹில்யாபாய்’ ஆகிய தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று படப்பிடிப்பிற்காக பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, மும்பை ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் அவரது பைக்கின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பலத்த காயமடைந்தநிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *