சாரா அர்ஜுனின் “யூபோரியா” டிரெய்லர் வெளியீடு

சாரா அர்ஜுனின் “யூபோரியா” டிரெய்லர் வெளியீடு


ஒக்கடு’, ‘சூடலானி உண்டி’ மற்றும் ‘ருத்ரமாதேவி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் குணசேகர், தற்போது ‘யூபோரியா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், அப்போது வெளியாகவில்லை. இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், புதுமுக நடிகர் விக்னேஷ் கவிரெட்டி, கவுதம் மேனன் மற்றும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமான சாரா அர்ஜுனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இயக்குநர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் காவலதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் துரந்தர் படத்தில் சாரா அர்ஜுன் நடிப்பு கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

போட்டித்தேர்வுக்குப் படித்திருக்கும் ஒர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சாரா அர்ஜுனின் ‘யூபோரியா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *