சாய் பல்லவி பகிர்ந்த “அமரன்” படப்பிடிப்பு புகைப்படங்கள்

சாய் பல்லவி பகிர்ந்த “அமரன்” படப்பிடிப்பு புகைப்படங்கள்


சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாயிற்று. இத்திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடத்திற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் படங்கள் லிஸ்டில் ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்தது.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கதில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவையொட்டி நடிகை சாய் பல்லவி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *