சாமிதோப்பில் நடிகர் விஷால் சாமி தரிசனம்|Actor Vishal Sami’s darshan at samy thoppu

சாமிதோப்பில் நடிகர் விஷால் சாமி தரிசனம்|Actor Vishal Sami’s darshan at samy thoppu


சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் நடிகர் விஷால் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

தலைப்பாகை அணிந்து பதியினுள் சென்ற நடிகர் விஷால் பள்ளியறையை சுற்றி வந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு நிர்வாகம் சார்பில் நெற்றியில் திருநாமமிட்டு இனிமம் வழங்கப்பட்டது.

நடிகர் விஷால் சமீபத்தில் தனது திருமணம் குறித்து அறிவித்தார். அதன்படி, அவருக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *