சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவது யார்?

பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்தார். நன்றாக போய்க் கொண்டிருந்த 15 வருட திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை ஜனாவை மணந்தார்.
இந்நிலையில் சானியா மிர்சா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சினிமா படம் உருவாக இருக்கிறது. 2019-ம் ஆண்டிலேயே இந்த அறிவிப்பு வெளியான நிலையில் அந்தத் திட்டம் செயலுக்கு வராமல் இருந்தது.
அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா ஆகியோரை சானியா மிர்சா பரிந்துரைத்திருந்தார். தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து சானியா மிர்சா சமீபத்தில் அளித்த பேட்டியில், “என் வாழ்க்கை வரலாறு படத்தில் அக்ஷய் குமார் நடித்தால் நன்றாக இருக்கும். நான் அவரது தீவிர ரசிகை. என் வாழ்க்கை வரலாற்றில் அக்ஷய் குமார் நடித்தால் அவரை காதலிப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என்று நகைச்சுவையோடு சானியா மிர்சா கூறினார்.