சாந்தனுவின் “மெஜந்தா” டீசர் வெளியானது

சாந்தனுவின் “மெஜந்தா” டீசர் வெளியானது


சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நடிக்கும் படம் ‘மெஜந்தா’. பரத் மோகன் இயக்கும் இப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்து வழங்குகின்றனர். இப்படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார்.

‘மெஜந்தா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இயக்குநர் பரத் மோகன் இக்லூ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும், கோத்தகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், ‘மெஜந்தா’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *