சவுரவ் கங்குலி பயோபிக் – உறுதி செய்த நடிகர்….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்|Rajkummar Rao nervous to play Sourav Ganguly in biopic

சென்னை,
சவுரவ் கங்குலியின் பயோபிக்கில் கங்குலியாக நடிக்க பதட்டமாக உள்ளதாக நடிகர் ராஜ்குமார் ராவ் கூறி இருக்கிறார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ராஜ்குமார் ராவ் பேசுகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலியாக நடிப்பதை உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில்,
”ஆம், நான் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறேன். இது ஒரு பெரிய பொறுப்பு, அதனால் எனக்கு மிகவும் பதட்டமாக இருக்கிறது” என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஜ்குமார் இந்த வேடத்தில் நடிப்பார் என்று கங்குலி கூறி இருந்தார். ராஜ்குமார் கடைசியாக ‘பூல் சுக் மாப்’ படத்தில் வாமிகா கபிக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படம் மே 23 அன்று வெளியானது. விரைவில் ஓடிடியிலும் வெளியாக உள்ளது.